Expressions- எண்ணமும், எழுத்தும்

விசிதாவின் எண்ணங்கள்,படைப்புகள் Wichita's Writings in Tamil Unicode

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

பீரில் ஊறிய தயிர்வடை

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதி வெளியீட்டு விழா குறித்து பத்ரியும், நாரயணும் எழுதியிருக்கிறார்கள்.பத்ரி நல்ல குஷியான கிண்டல் மூடில் இருப்பதால் அவர் பதிவில் எழுதியுள்ளவை கிண்டலாக படிக்கத் தகுந்த வகையில் இருக்கின்றன.

"நான் ஒரு subversive எழுத்தாளன். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளில், நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது (சில சமயங்களில்) கொல்லவும் பட்டார்கள். ஆனால் நான் எழுதிக்கொண்டிருக்கும் சிறு பத்திரிகைச் சூழலில் இருந்துதான் எனக்கு அச்சுறுத்தல் வந்ததே தவிர இதுவரை அரசு அச்சுறுத்தல் ஏதும் இருந்ததில்லை. காரணம்: என்னைப் பற்றி அரசுக்கோ தமிழ்ச் சமூகத்துக்கோ தெரியாது. 200 பேருக்கு மட்டுமே இலவசமாக அனுப்பப்படும் பத்திரிகையில் எழுதும் ஒருவனைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?"

சாரு தன்னை சப்வேர்ஸிவ்எழுத்தாளர் என்று கூறுவதெல்லாம் மிகையான சுயவிளம்பரம். சாருவின் எழுத்துக்களும் அவர் கிண்டல் செய்யும் தயிர்வடை எழுத்துவகையில்தான் சேரும், குறிப்பாக கோ.ப கட்டுரைகள். என்ன
அவற்றை பீரில் ஊறிய தயிர்வடை எழுத்துக்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். தயிர்வடை தயிர்வடைதான் பீரில் ஊறினாலும் அது தயிர்வடைதான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

படியுங்கள், சிரியுங்கள்

தமிழில் சில வலைப்பதிவாளர்கள் இஸ்லாமும், அறிவியலும் குறித்து பதிவுகளை இட்டு வருகின்றனர். இவைகளில் அவர்கள் கூறும் பல கருத்துக்கள் நகைப்புக்குரியவை. இவர்கள்ஆதாரம் காட்டும் மூலங்களே அப்படித்தான் இருக்கின்றன.

உதாரணமாக இந்த இணைய தளம். இதில் உள்ள கட்டுரைகள் காட்டும் ஆதாரங்கள் நிபுணர்களாலும், அந்தந்த துறைகளில் உள்ள அறிஞர்களாலும் ஆராயப்பட்டு கட்டுரைகளை வெளியிடும் ஜர்னல்களில் (Journal of American Medical Association, Nature, Science, New England Journal of Medicine, Lancent, Science, Social Science and Medicine போன்றவை) வெளியானவை அல்ல.மாறாக இஸ்லாமும் அறிவியலும் குறித்து இஸ்லாமியர்களே எழுதியுள்ள நூல்கள், கட்டுரைகள். இவற்றில் எந்த முறையான ஆதாரமும் தரப்படுவதில்லை. அறிவியல் கண்ணோட்டம் என்ற பெயரில் இஸ்லாம் வலியுறுத்துவதாக இவர்கள் கூறும் பெண்களின் மீதான கட்டுப்பாடுகளும், ஒடுக்குமுறைகளும்தான் முன் வைக்கப்படுகின்றன.

இது போன்றவைகளை முன் வைத்து இஸ்லாமும் அறிவியலும் குறித்து எழுதும் வலைப்பதிவாளர்கள் நமக்கு படித்து வாய்விட்டு சிரிக்க வாய்ப்பளிக்கிறார்கள் என்று அவற்றை படித்து சிரிக்கலாம். அவர்களிடம் வாதிடுவது வீண் , ஏனெனில் அவர்களுக்கு அவர் ஆதாரங்களாக காட்டும் இணையதளங்கள் பிரச்சினைக்குரியவை என்பது புரியவில்லை.எனவே விமர்சித்து பின்னூட்டங்கள் இட்டுப் பயன் ஏதும் இராது.

இவ்வலைப்பதிவுகளை புறக்கணிக்கலாம் அல்லது படித்து விட்டு சிரிக்கலாம். எது உங்கள் விருப்பம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இன்னொரு புகைப்படம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சிவகுமார் அண்ணாச்சிக்கு அன்புடன் ஒரு பின்னூட்டம்

அண்ணாச்சி , லீகல் ஆக்ஷ்ன்,சங்கர பாண்டிக்கு எச்சரிகை, ஒருவாரக் கெடு அது இதுன்னு எழுதியிருக்கீங்க, அண்ணன் ஆலோசனை கொடுத்துதான் இப்படியெல்லாம் எழுதுறீங்கன்னு எனக்கு தோணுது. ஏன்னா உங்களுடைய பின்னூட்டத்தில் அவரைத்தானே கன்சல்ட் பண்ணலாம்முன்னுநீங்கதானே எழுதினது. ரொம்ப டென்ஷன் ஆவதிங்க அண்ணாச்சி. அசோகமித்திரன் சார் எழுதினதைப் படிச்சா அல்லது அவர் போட்டவைப் பார்த்தா காட் பீலிங் வந்துறாதா.

பகைவனுக்கு அருள்வாய்ன்னும் பாரதி சொன்னத பத்தி ஞானபீடம் சொன்ன விளக்கத்தை அண்ணாச்சி கேகல்லியா இல்லை மற்ந்திடுச்சா.சரி அண்ணாச்சி இப்ப மாட்டருக்கு வரேன், அசோகமித்திரன் சார் எழுதின கடிதம், அவர் பேரில வெளியான செவ்வி பற்றித்தா
னான் எழுதினேன்.அசோகமித்திரன் சார் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கணும்ன்னு நான் எழுதலியே அண்ணாச்சி, ஆனா நீங்க் இதில திண்ணை, வெண்னை, விளக்கெண்ணைன்னு ராதா ராமசாமி, அரவிந்தன் நீலகண்டன் அது இதுன்னு எதையாவது பேசி மாட்டருக்கு வராம டபாய்க்கிறீங்க, அப்படி தப்பிதவறி மாட்டருக்கி வந்தா நான் சொல்லதையெல்லாம் பேசி குழப்ப டிரைப் பண்ணுறீங்க, உதார் விடுறீங்கா. டர்ட்டி டிரிக்க்ன்னா என்னன்னு கேட்டிங்கன்னா இதுதான்னு நான் சொல்ல தோதா நீங்க எழுதியிருக்கீங்க.பகுத் தன்யேவாத் சிவகுமார்ஜி. இன்னும் ஏதாவது சாம்பிள் வேணுமின்னா கூச்சப்படாம கேளுங்க அண்ணாச்சி, உங்க ப்லொக்லிருந்தே எடுத்து தரேன்,அப்பதானே உங்களுக்கு ஈசியா புரியும். எனக்கு டிரெயினைப்பிடிக்கணும், வரேன் அண்ணாச்சி.

I am posting this here so that even Mr.Sivakumar deletes this from his blog there is a record.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழில் எழுதும் வலைப்பதிவாளர்களே, வலைப்பதிவுகளைப் படிக்கும் அன்பர்களே, பின்னூட்டங்கள் இடுபவர்களே உங்களுக்கு ஒரு உண்மையினை இப்போது சொல்லப் போகிறேன். இணையத்தில் இந்த்துவ எதிர்ப்பு, ஜெயகாந்தன் எதிர்ப்பு, அசோகமித்திரன் எதிர்ப்பு போன்றவற்றை நான் பல பெயர்களில் செய்து வருகிறேன். பி.கே. சிவகுமார் என்ற பெயர் தவிர பிற பெயர்களில் இந்த்துவத்துவதை எதிர்த்தும், ஜெயகாந்தன், அசோகமித்திரனை விமர்சித்தும் இணையத்தில் பி.கே,சிவக்குமார் என்ற பெயர் தவிர பிற பெயர்களில் எழுதி வருகிறேன்.

இதில் வெங்கட், தங்கமணி,அருள், சுந்தரவடிவேல், ரோசாவசந்த், பெயரிலி,கார்திக்ராமாஸ், குழலி,ரவி சீனிவாச், டோண்டு,சாரா, பாலாஜி-பாரி,மூக்கன் ஆகிய பெயர்களும் அடங்கும்.

ஆண் பெண் பெயர்கள் தவிர மிருகங்கள் பெயரிலும் இனிப் பதிய உள்ளேன், உ-ம் த தா ந.கொ.சிங்கம். இதைப் பயன்படுத்த ஜெயகாந்தன் அனுமதித்துள்ளார். ஏனெனில் இந்த த.தா.ந.கொ என்பது அவர் பெயரில் வணிகச் சொல்லாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றிகளும், வணக்கங்களும்.

உங்களை குழப்புவதற்காக நான் ரஜனி ஆதரவு கருத்துக்களை அன்புடன் பாலா, மாயவரத்தான், ரஜனி ராம்கி என்ற பெயரிலும், எழுதுகிறேன். அறிவியல், பெண்ணியம் குறித்து எழுத பயன்படுத்து, பெயர்களில் தேன் துளி, கறுப்பி, பெட்டை, பெண் பெண் மட்டுமே என்ற பெயர்களும் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் இணையத்தில் பி.கே. சிவகுமார் என்ற பெயர் தவிர பிற அனைத்து பெயர்களிலும், அனைத்து வலைப்பதிவுகள், இணைய சஞ்சிகைகளில் எழுதுவதும் நான் தான், நானேதான்.

ராதா ராமசாமியும் நானே அரவிந்தன் நீலகண்டன், கோபால் ராஜாராம், துக்காராம், புதிய் மாதவி உட்பட பல பெயர்களை நான் பயன்படுத்துகிறேன்.

பி.கே.சிவகுமாரின் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் என்ற வலைப்பதிவினைத் தவிர பிற வலைப்பதிவுகளில் எழுதப்படும் கருத்துக்கள் என்னதே, பின்னூட்டங்களும் என்னதே, பி.கே.சிவக்குமார் என்ற பெயரில் ஏதாவது பின்னுட்டம் இருந்தால் அது மட்டும் அவர் எழுதியது என்று கொள்க. அதை அவர் பெயரில் யாராவது இட்டிருந்தால் அது நானில்லை, நானில்லை. அதை எழுதியது அவர்தானா என்பதை அவர்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த உண்மையினை எந்த வலைப்பதிவிலும் இடலாம் என்றாலும் உங்களுக்கு இதை தெளிவாக எடுத்துரைக்க விசிதா என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவில் இடுகிறேன். இதைப் படித்த பிறகாவது சிவகுமார் அண்ணாச்சிக்கு தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

விஜய ராஜேந்தரும் தமிழ் பதிப்புலகும்

இளையராஜாவின் உரையைக் கேட்கலாம் என்று போனால் அது அந்த முகவரியில் இல்லை.சரி என்று இதைக் கொடுத்தால் ஒருவேளை சரியான இணைய முகவரி அல்லது உரை எந்தப் பெயரில் இடப்பட்டுள்ளது என்று தெரியலாம் என்று பார்த்தால் ...... தளத்தில் விற்கப்படும் புத்தகக்ங்களின் அட்டைகளின் ஸ்கேன் செய்யப்பட்ட பிம்பங்கள் உட்பட பல இருந்தன.

இத்தளத்தில் ஒவியங்கள் என்று தேடினால் ஏதும் இல்லை என்று சொல்லப்படும்.ஆனால் இங்கே போனால் 55 ஒவியங்களைக் காணலாம். தொழில் நுட்ப அறிவு அதிகம் உள்ளவர்கள் நோண்டினால் இன்னும் என்னென்ன கிடைக்குமோ.அதற்காக நான் நோண்டச் சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி விஷயத்திற்கு வருவோம் - புத்தகங்களின் அட்டைகளைப் பார்த்தால் விஜய ராஜேந்தருக்கு பதிப்புலகில் சீடர்கள் அதிகம் என்று தெரிந்தது. பாட்டில் இதயம் என்று வந்தால் ரத்தம் சொட்டச் சொட்ட இதயத்தினைக் காட்டுவாரே அது போல் புத்தகங்களுக்கு அட்டைகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக தலைப்பில் பெண்ணியம் என்று இருந்துவிட்டால் அட்டையில் பெண் படம் இருக்க வேண்டும் என்பதை விதியாக வைத்திருக்கிறார்கள் போலும்.வெள்ளாவி என்று ப்த்தக தலைப்பென்றால் அட்டையில் சலவைச் செய்யப்பட்ட வேட்டி, நேர்முகம் - இணைய விவாதம் என்றால் இன்டெர்னெட் எக்ஸ்புளோரர் , மூன்று டபிள்யுக்கள் அட்டடையில். ரப்பர் என்றால் ஒரு பெண் ரப்பர் மரத்திலிருந்து பால் எடுப்பது, ஆயிரங்கால் மண்டபம என்றால் ஒரு பெரிய அரங்கின் புகைப்படம், கூந்தல் என்றால் கூந்தலுடைய பெண், என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்றால் படுக்கை அறையின் ஒவியம் அட்டையில்.

இதையெல்லாம் ராமாபுரத்திலிருந்து நெவார்க்கிற்கு ஆட்டோ அனுப்ப மாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதுகிறேன், ஒருவேளை எடிசனிலிருந்து வருமோ :)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அடுத்த கதை மற்றும் திரைப்படம்

பிரபல சிற்றிதழ் ஒன்றில் வரவிருக்கும் கதையும், ஒளி இயக்குநர் இயக்கவிருக்கும் படத்தின் கதையும் இந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஒரு விளை சிறுகதை சர்சைக்குள்ளாயிருப்பதால் இன்னொரு கதை அதை விட அதிக சர்ச்சைக்குள்ளாக வேண்டும் என்பதால் இந்த சம்பவத்தினை மையமாக் கொண்டு கதை எழுதுவதாக அந்த அழ்கிய எழுத்தாளர் கூறி வருகிறாராம். இதே கருவினைக் கொண்டு அர்த்தசாஸ்திர எழுத்தாளரும் எழுத உள்ளார் என்றும், இரண்டும் ஒரே இதழில் வெளிவரும் என்றும் பேசிக் கொள்கிறார்கள். இதில் பூடகமாக மதம் இடம் பெறும் என்று அழகிய எழுத்தாளர் சொன்னாராம்.அர்த்தசாஸ்திர எழுத்தாளரோ இதே கருவை தன் நடையில் விரிவான வர்ணனைகளுடன் எழுதுவாராம்.

இதற்கிடையில் தன்னுடைய அடுத்த படத்திற்கு இதையே பயன்படுத்துவதாக ஒளி இயக்குந்ர-நடிகர் முடிவு செய்துள்ளாராம். கதைப்படி அவர் முதலில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவராகவும், பின் காதலானகவும், பின் கணவனாகவும் பாத்திரமேற்பாராம்.

இதை அடிப்படையாகக் கொண்டு புதிய கோலங்கள் என்று தொலைக்காட்சித் தொட்ர் ஒன்று தயாரிக்க்படுகிறது என்று சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாகக் கிடைத்த தகவலின் படி வல்லவன் நடிகரும் இதை கருவாகக் கொண்டு படம் எடுக்க உள்ளதாகவும், அதில் ஒன்றுக்கு மூன்றாக ஆசிரியைகள் இருப்பார்கள் என்றும் கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இரண்டு மாமேதைகள்

ஐன்ஸ்டீன், கோடேல் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரை நியுயார்கரில் வெளியாகியுள்ளது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.